பேரறிவாளன் பறை மேளம் இசைத்து கொண்டாட்டம்! - பேரறிவாளன் விடுதலை
🎬 Watch Now: Feature Video
பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று (மே.18) தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து பேரறிவாளன் இருக்கும் ஜோலார்பேட்டை வீட்டின் முன் வெடி வெடித்து கொண்டாடப்பட்டது. வீட்டிற்கு உள்ளே சென்ற பலர் அற்புதம்மாளுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினர். போதும்பா.. போதுமா நான் சர்க்கரை வியாதி காரி.. அவனுக்கு கொடுங்க என்று அற்புதம்மாள் கூற.. எல்லோரும் பேரறிவாளனுக்கு இனிப்பு வழங்கினர். அதைப் பார்த்து அற்புதம்மாள் கண்ணீர் விட்டார். உடனே நெகிழ்ச்சி அடைந்த பேரறிவாளன்.. தாயை கட்டிபிடித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேரறிவாளன் தனது நண்பர்களுடன் இணைந்து பறை மேளம் இசைத்து கொண்டாடினார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST