தென்காசியில் கொளுத்தும் வெயிலிலும் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு - பூஜை
🎬 Watch Now: Feature Video
தென்காசி: புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி அகஸ்தியர் கோயிலில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி திருவிழாவானது சுமார் பத்து நாட்கள் திருவிழாவாக ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கோயில் திருவிழா இந்த ஆண்டும் ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தத் திருவிழாவானது 10 நாட்கள் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக விநாயகர் பூஜை, கும்ப பூஜை, மூலமந்திர ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது.மேலும் தினமும் இரவு கட்டளைதார்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலாவானது நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக எட்டாம் திருநாள் நிகழ்ச்சியான ராமர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலா வந்தனர். மேலும் இன்று விரதம் இருந்த பக்தர்கள் பால்குடத்திற்கு பின்னர் கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் பெண்களும், குழந்தைகளும் வீதிகளில் கும்பிட்டு அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி ஸ்ரீ அகத்தீஸ்வரருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சுற்று வட்டார கிராமத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அகத்தீஸ்வரருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து புளியங்குடி, சிந்தாமணி நகரம் முள்ளிக்குளம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.