ரேஷன் கடை விவகாரம் - முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே நேரடி பண பரிவர்த்தனை மூலமாக இலவச பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்குவதற்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதன் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மூடப்பட்டள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்ககோரி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன்பின் இந்த ஊழியர்களைச் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, கால அவகாசம் தேவை என்றும் தனது வீட்டை முற்றுகையிட்டது தவறு எனக்கூறியும் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் முற்றுகையில் ஈடுபட்ட ஊழியர்களை காவல் துறையினர் வலுகட்டாயமக அப்புறப்படுத்தினர். அதன்பின் அவர்கள் புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் அனைவரையும் கைது செய்தனர். ரேஷன் கடை ஊழியர்களின் சாலை மறியல் காரணமாக புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் பிட் பாக்கெட் அடிக்க நினைக்கிறார்" - ஓபிஎஸ் தரப்பு பதிலடி!