Thirukkoil app: பழனி தங்கத் தேரோட்டத்தை இனி மொபைல் ஆப்பில் பார்க்கலாம்!
🎬 Watch Now: Feature Video
பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை போன்ற சிறப்பு வாய்ந்த மாதங்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த பழனி மலைக் கோயிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு தங்கத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்று.
இந்த தங்கத் தேரில் சின்ன குமாரர் சாமி, மலைக் கோயிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மொத்தம் 14 நிலையாக பிரிக்கப்பட்டு, பக்தர்கள் தங்கத் தேர் இழுத்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவர். இதற்குக் கட்டணமாக 2 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இந்த தங்கத் தேரோட்டத்தை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்திருப்பர்.
இந்த நிலையில், தற்போது இந்து சமய அறநிலைத்துறை மூலம் தொடங்கப்பட்டுள்ள அலைபேசி செயலி மூலம், பக்தர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பழனி மலைக் கோயிலில் நடைபெறும் தங்கத் தேரோட்டத்தை காண்பதற்கு திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள், இந்த அலைபேசி செயலியால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த அலைபேசி செயலியின் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.mslabs.thirukoil