பழனி கோவிலுக்கு வந்த முதியவரை மின் இழுவை ரயிலில் ஏற்ற மறுப்பு!

🎬 Watch Now: Feature Video

thumbnail

திண்டுக்கல்:மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகேசன் என்கிற 85 வயதான முதியவர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்குவதற்காக ரோப்கார் நிலையத்தில் காத்திருந்துள்ளனர்,

அப்போது  கோவில் நிர்வாகிகள்,  நேரம் முடிந்து விட்டது என்று கூறி, மின் இழுவை ரயிலில் முதியவரை  ஏற்ற மறுத்து உள்ளனர். இதனையடுத்து அவருடன் வந்த குடும்பத்தினர் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம், உடல்நலம் இல்லாத முதியவரை மட்டுமாவது ஏற்றிக் கொள்ளுமாறு  கேட்டும், நிர்வாகிகள் முதியவரை  ஏற்ற அனுமதி மறுத்து உள்ளனர். 

இதனால் படி வழிப்பாதையில் இறங்கிய முதியவரால்  முழுமையாக நடக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து நடக்க முடியாமல் அவர் தவழ்ந்தபடியே படியில் இறங்கியதை பார்த்த பக்தர்களை கீழே இருந்த செக்யூரிட்டிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து  செக்யூரிட்டிகள் அங்கு சென்ற முதியவரை  இறக்கிய போது அவரால்  நடக்க முடியாமல் போனது. பின்னர் அங்கிருந்து மர நாற்காலி மூலம் தூங்கி வந்து காரில் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பக்தர்கள்  மத்தியில்  கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வயோதிகம், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் சாமி தரிசனம் செய்யும் நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை தற்போது அவர்களுக்குப் பயன்படாமல், பணம் படைத்தவர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே ஏறி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக உடல்நலம் இல்லாத வயதான பக்தரை ஏற்றாமல் அலட்சியம் செய்த திருக்கோவில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றில் வயோதிகம், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க :பேருந்தில் பாடல் ஒலியைக் குறைக்க சொன்ன நீதிபதி.. அடுத்து நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.