Muthalamman car festival: ஆம்பூரில் =முத்தாலம்மன் கோயில் 100 அடி தேர்த் திருவிழா கோலாகலம்! - ஆம்பூர்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் ஆம்பூர் அருகே உள்ள பி-கஸ்பா பகுதியில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி வாரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஆடி மாத கடைசி வாரமான இன்று (ஆகஸ்ட் 16) முத்தாலம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிலையில், கோயில் வளாகத்தில் பக்தர்கள் அம்மனுக்கு கிடா மற்றும் கோழிகளைப் பலியிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் இதன் தொடர்ச்சியாக கேரள செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க 100 அடி உயரத் தேரில் முத்தாலம்மன் சிலை மற்றும் கரகம் வைக்கப்பட்ட பின்னர் 100 அடி தேரை பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இந்த முத்தாலம்மன் 100 அடி தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், இந்த 100 அடி தேர்த் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.