"பத்திரிக்கையில் வெளியான செய்திய பாத்தா சிரிப்பு தான் வந்துச்சு" - அமைச்சர் கூறியதற்கு காரணம் என்ன!
🎬 Watch Now: Feature Video
திருச்சி: கே.கே நகரில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் செயல்விரர் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இரவு நேர காவலர்கள், பெற்றோர், ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் நிதிகள் திரட்டப்பட்டு நியமிக்கப்படுவார்கள். பள்ளிகள் தன்னிறைவு பெற வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணை நிறைவேற்றப்படும்.
கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆனப்பிறகும் திறக்கப்படாமல் இருக்கும் திருவரங்கம் பள்ளி பற்றிய தகவல்களை கேட்டறிந்துள்ளேன். தூரமாக இருக்கின்றது என்கிற காரணத்தை பெற்றோர்கள் சொல்கின்றார்கள். ஆகையால் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
எதற்காக அப்பள்ளியை அவ்வளவு தூரத்தில் சென்று கடந்த ஆட்சியாளர்கள் கட்டினார்கள் என்று தெரியவில்லை. கட்டடம் வீணாகாமல் அப்பள்ளி திறக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மேடையில் வைத்த கோரிக்கை ஒன்று! ஆனால் பத்திரிகைகளில் வேறு விதமாக எழுதியிருந்தார்கள்.
கட்டி முடிக்கப்பட்ட எந்த கட்டடமும் திறக்கப்படாமல் இருக்க கூடாது என்பதற்காக அதிகாரிகள் எங்களுக்கான பணியை தொடர்ந்து வழங்குகிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கூட கட்டடங்களை திறந்து வருகின்றோம். பொது மக்களின் பயன்பாட்டிற்காக தான் இதுபோன்ற ஓய்வில்லாத பணியை செய்கின்றோம்.
இதுபோன்ற நாள்களில் எங்களிடமும் கலந்து பேசினால், எளிமையான வழிகளை நாங்களும் பரிந்துரைப்போம் என்றுதான் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் கூறினாரே தவிர சில பத்திரிகைகளில் வந்தது போல அல்ல. அதுவுமில்லாமல் அது பொது உறுப்பினர் கூட்டத்தில் எங்களுக்குள் உரிமையுடன் பேசிக்கொள்வோம்.
எந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும் காலில் விழுவதை தவிர்க்க வேண்டும். பூச்செண்டு, சால்வைகள் வழங்குவதை விட, புத்தகங்களை வழங்குங்கள், அது நூலகத்திற்குப் பயன்படும்" என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.