கோவையில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு வாக்கத்தான்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: மத்திய அரசு 2023-ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்ததைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் சிறுதானியங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று மே 12-ஆம் தேதி, கோவையில் உணவு பாதுகாப்பு ஆணையம்(fssai) சார்பில் சிறுதானியங்கள் குறித்து சிறுதானிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நிகழ்ச்சி (millet walkathon) நடைபெற்றது. இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் குழந்தைகள், பெரியவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடைப்பயணம் மேற்கொண்டனர்.
இந்த வாக்கத்தானை மத்திய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கண்ணன் மற்றும் கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொடி அசைத்துத் துவக்கி வைத்தனர். இந்த நடைப்பயணம், வ.உ.சி மைதானத்தில் துவங்கி பாலசுந்தரம் சாலை வழியாக அவிநாசி சாலையை வந்தடைந்து, பின் மீண்டும் வ.உ.சி மைதானத்திலேயே நிறைவடைந்தது. சிறுதானியங்களின் பயன்களை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இந்த மில்லெட் வாக்கத்தான் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: மீன் பண்ணை மானியம் வழங்க ரூ.31 ஆயிரம் லஞ்சம்.. ஈரோட்டில் மீன்வளத்துறை அதிகாரி அதிரடி கைது!