ETV Bharat / entertainment

ஏன் அடுத்த மைக்ரோசாஃப்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வரக்கூடாது? - ஏ.ஆர்.ரகுமான் கேள்வி! - A R RAHMAN

ஏன் அடுத்த மைக்ரோசாப்டோ, ஆப்பிள் நிறுவனமோ இந்தியாவில் இருந்து வரக்கூடாது. நமது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும்என்று சென்னை ஐஐடி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.

மெய்நிகர் படத்தை இயக்கியதற்கான விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான்
மெய்நிகர் படத்தை இயக்கியதற்காக விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2024, 11:08 PM IST

சென்னை : சென்னை, ஐஐடியின் XTIC எனும் experiential Technology Innovation center சார்பில், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாட்கள் கருத்தரங்கு மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. சிறந்த விரிச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்திற்கான விருதுகளும் வழங்கப்பட்டன.

இதில், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த லீ மஸ்க் என்ற மெய் நிகர் (விர்ச்சுவல்) திரைப்படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு புதுமைக்கான விருதை சென்னை ஐஐடி வழங்கியது. மேலும் XTIC என்ற experiential Technology innovation centre மையத்தின் செய்தி வெளியீட்டு மலரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.

ஏ.ஆர்.ரகுமான் மேடை பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் மேடையில் பேசிய அவர், "உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மெய் நிகர் தொழில் நுட்பத்தால் 37 நிமிட படம் பார்த்தவர்கள் 10 நிமிடம் படமா எனக் கேட்டனர். இந்தப் படத்தினை தயாரிக்க 5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்துள்ளனர். புதிய தொழில்நுட்பம் என்பதால் அனைவரும் ரசித்தனர்.

இதையும் படிங்க : "பெண்களின் அழகு கூந்தலில் இல்லை" - முத்தரசனுக்கு ஈஷா கண்டனம்!

ஏன் அடுத்த மைக்ரோசாப்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வரக் கூடாது. நமது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும். மத உணர்வோடு தொடர்பு கொண்ட இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றிப் பார்க்கலாம்.

கல்யாண நிகழ்ச்சியை உணர்வு பூரவமாக ரசிக்கலாம். ஆனால், என்ன. அளவுக்கு அதிகமாக தலை வலிக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். கற்பனைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. இசை மூலம் மனித சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது.

நான் ஒவ்வொரு முறையும் மைக்ரோசாப்ட், ஆப்பிள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஏன் இதே போல் இந்தியாவில் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கக் கூடாது என்று யோசித்தது உண்டு. அதற்கான அறிவும், திறனும் நமது மாணவர்களிடம் உள்ளது. கூடிய விரைவில் இதை எதிர்பார்க்கலாம்" என மேடையில் பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.