அம்பத்தூரில் பிரபல உணவக தொழிற்சாலையில் தீ விபத்து! - AMBATTUR
🎬 Watch Now: Feature Video
Published : Nov 12, 2024, 9:36 PM IST
சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு உணவுகள், இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள சமையலறையில் இன்று (12.11.2024) யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது உணவகத்தில் உள்ள பெரும்பாலான பகுதியில் பரவி உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து அம்பத்தூரில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து ஊழியர்கலை காவல்துறை வெளியேற்றியுள்ளனர்.
தீ முழுமையாக அனைத்து பின்னர் பொருட் சேதம் தீக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை மையப்பகுதியில் உணவு பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.