"ஓடு ராசா ஓடு" - மீனவர் வலையில் சிக்கிய 800 கிலோ கடல் பசு! - SEA COW IN THANJAVUR
🎬 Watch Now: Feature Video
Published : Nov 14, 2024, 7:33 AM IST
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசு சிக்கியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் கடந்த 10 ஆம் தேதி அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மீனவர் செல்லத்துரை வலையை கடலில் வீசி மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, சுமார் 800 கிலோ எடை, 8 அடி நீளமும், 5 அடி அகலம் கொண்ட அரிய வகை கடல் பசு வலையில் சிக்கியுள்ளது.
கடல் பசுவை கண்ட மீனவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்ட அலுவர்கள் மீனவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையும் வழங்கியுள்ளனர். வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில், மீனவர்கள் நல்ல நிலையில் கடல் பசுவை மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர். கடல் பசுவை மீட்டு உயிருடன் விட்ட மீனவர்களை வன அலுவலர் சந்திரசேகரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.