ETV Bharat / state

மான்கள் கூட்டத்துக்கு நடுவே ஓடி அச்சுறுத்திய இளைஞருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்! - DEER

நீலகிரியில் மன்றாடியார் எனும் வனப்பகுதியில் காரை நிறுத்தி, வனப்பகுதியில் மான்கள் கூட்டத்துக்கு நடுவே ஓடி, அச்சத்தை ஏற்படுத்திய இளைஞருக்கு வனத்துறையினர் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

வனப்பகுதிக்குள் இறங்கி ஓடிய இளைஞர்
வனப்பகுதிக்குள் இறங்கி ஓடிய இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2024, 10:48 PM IST

நீலகிரி : பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பொழுதை கழிப்பதற்கு, வார இறுதி நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவது வழக்கம். அந்த வகையில், இந்த வார இறுதி நாட்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேளரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முதுமலை வழியாக நீலகிரிக்கு வருகை தந்தனர்.

அப்போது மன்றாடியார் எனும் வனப்பகுதி வழியாக காரில் வந்த சில சுற்றுலா பயணிகள், காரை நிறுத்திவிட்டு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மான்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தனர். அப்போது, அவ்வழியாக காரில் வந்த இளைஞர் ஒருவர் காரைவிட்டு இறங்கி அங்கு சுற்றித்திரிந்த மான்கள் கூட்டத்திற்குள்ளே ஓடினார்.

வனப்பகுதிக்குள் இறங்கி ஓடிய இளைஞர் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இளைஞர் ஓடி வருவதைப் பார்த்த மான்கள் அச்சத்தில் அங்கும் இங்குமாக சிதறி ஓடின. இதனை அவ்வழியாக காரில் சென்ற மற்றொரு நபர் வீடியோவாக பதிவு செய்து அங்கிருந்த சோதனைச்சாவடி அதிகாரியிடம் காண்பித்தார். மேலும், அந்த வீடியோவை அதிகாரியிடம் பரிமாறிக் கொண்டார்.

இதையும் படிங்க : பக்தரை கட்டையால் தாக்க வந்த காவலர்.. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பரபரப்பு!

இதனையடுத்து மான்கள் கூட்டத்திற்குள்ளே ஓடிய இளைஞரின் கார் சோதனைச்சாவடிக்கு வரும்போது அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள் அத்துமீறி வனப்பகுதிக்குள் வாகனத்தை நிறுத்தியது மட்டுமல்லாமல், வனப்பகுதிக்குள் இறங்கி ஓடியதற்காக அந்த இளைஞருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். இளைஞர் வனப்பகுதிக்குள் ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதுமலை சாலை வழியாக உதகை மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவோ, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.