ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை.. 97 ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி! - RAIN

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 8:04 PM IST

திருவண்ணாமலை:  வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழையானது பெய்து வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே மழை மற்றும் வெயிலுடன் கூடிய மழை விட்டு விட்டுப் பெய்து வருவதன் காரணமாக  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் உருவாகி உள்ளது. 

குறிப்பாக கண்ணமங்கலம், ஆரணி, சேவூர், ராட்டினமங்கலம், படவேடு, சந்தவாசல், வண்ணங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையுடன் கூடிய மிதமான தொடர் மழையும் பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட அளவில் 97 ஏரிகள் நிரம்பி வழிகின்றது.

இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் கனமழை பெய்து வருவதன் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த இரு தினங்களுக்கு  திருவண்ணாமலை  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.