திருப்பத்தூரில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஒரு லிட்டர் பாலை 30 ரூபாய்க்கு ஆவின் கொள்முதல் செய்வதாகவும், கறவை மாட்டிற்கு வழங்கப்படும் தீவனங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளவதாவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அதேபோல், பிற தனியார் பால் கொள்முதல் நிலையங்களில் 1 லிட்டர் பால் 40 ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரை கொள்முதல் செய்து வருவதாகக் குற்றச்சாட்டு வைத்தனர். மேலும், அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1 லிட்டர் பால் விலையை 10 ரூபாய் உயர்த்தி 40 ரூபாய்க்கும், 1 லிட்டர் எருமைப் பாலை 55 ரூபாய்க்கும் உயர்த்திக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.