ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு.! ஒருவர் பலி, ஆறுபேர் படுகாயம் - ஜம்மு நிலச்சரிவு
🎬 Watch Now: Feature Video
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ராம்பன் மாவட்டம், சிரி கிராமம் அருகே உள்ள, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (மார்ச் 7) பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆறு பேர் படுகாயங்களுடன் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த நிலச்சரிவில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலச்சரிவால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், தற்காலிகமாக இருவழிப் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை அம்மாவட்ட துணை ஆணையர் முஸ்ரத் உல் இஸ்லாம் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் சும்பரைச் சேர்ந்த சுர்ஜித் சிங் என்றும், காயமடைந்தவர்கள் முகமது தாஜ், ஹமீத், ருபீனா பேகம், சகீனா பேகம், சல்மா பானி மற்றும் அமீர் என தெரியவந்துள்ளது. இந்த நிலச்சரிவின் காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சொமேட்டோவில் கஞ்சா கிடைக்குமா.? டார்ச்சர் கொடுத்த நபர்.! டெல்லி போலீஸ் நச் பதில்.!