“மண்டை மேல உள்ள கொண்டைய மறந்துட்டனே”.. போலீசாரைப் பார்த்ததும் வாகன ஓட்டி செய்த செயலால் சிரிப்பலை! - ஹெல்மெட்டை மாற்றி அணிந்து சென்ற முதியவர்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 27, 2023, 10:39 AM IST
தென்காசி: தென்காசியில் சிலர், விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக இயக்குவதாலும், அளவுக்கு அதிகமான ஒலி எழுப்பக் கூடிய வாகனங்களை பயன்படுத்துவதாலும், பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனை அடுத்து, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவலர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரு சக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதை அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதைக் கண்டு, பதற்றமடைந்த வாகன ஓட்டி ஒருவர், பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், தான் வைத்திருந்த ஹெல்மெட்டை மாற்றிப் போட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றார்.
வாகன ஓட்டி, ஹெல்மெட்டை மாற்றி அணிந்திருப்பதைக் கண்ட போலீசார், ஹெல்மெட்டை மாற்றிப் போடுங்கள் என்று கூறிவிட்டு, வாய்விட்டு சிரித்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.