கேப்டன் விஜயகாந்த் மறைவு.. ஒப்பாரி வைத்து, சிவபுராணம் பாடி தொழு நோயாளிகள் அஞ்சலி.. - விஜயகாந்த் உயிரிழப்பு
🎬 Watch Now: Feature Video
Published : Dec 29, 2023, 2:59 PM IST
திருவண்ணாமலை: கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு சமூக சேவகர் மணிமாறன் தலைமையில் கண்ணீர் மல்க ஒப்பாரி பாடல் பாடி, மெழுகுவர்த்தி ஏந்தி தொழு நோயாளிகள் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று (டிச.29) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இவரது இறப்பு என்பது தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரிடியாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுக்க உள்ள அவரது தொண்டர்களும், ரசிகர்களும் பல்வேறு முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி கிராமத்தில் உள்ள தொழு நோயாளிகள் மறுவாழ்வு இல்லத்தில், சமூக சேவகர் மணிமாறன் தலைமையில் இன்று (டிச.29) கேப்டன் விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், கேப்டன் விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, கண்ணீர் மல்க ஒப்பாரி பாடல்களைப் பாடியும், சிவபுராணங்கள் பாடியும் தொழு நோயாளிகள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.