'அறியாமல் பேசும் அண்ணாமலை'.. கொளத்தூர் மணி பேட்டி! - பாஜக குறித்து பேசிய கொளத்தூர் மணி
🎬 Watch Now: Feature Video
சேலம்: தமிழ்நாட்டில் பாஜக எந்தெந்த வழிகளில் காலூன்றப் பார்க்கிறது என்பதை இளம் தலைமுறையினரிடையே கொண்டு சேர்ப்பதற்காக, சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இரண்டு நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், நேரு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, "தமிழ்நாட்டில் பாஜக ஆர்எஸ்எஸ் காலூன்ற தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. அதற்கு பதவியில் இல்லாத சிலர் துணை போகின்றனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவரசத்தோடு, அறியாமல் தொடர்ந்து பேசி வருகிறார். இதனைத் தடுக்கும் விதமாகவே இந்த மாநாடு நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது'' என்றார்.
மேலும், ''ஆளுநர் ரவி சனாதான தத்துவங்களையும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளையும் முன்வைத்து மாநில அரசுக்கு எதிராக பேசி வருகிறார். சட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பது என்பது மறுப்பதாகவே பொருள்படும். ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்'' என்றார்.
வேங்கை வயல் விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து கருத்து தெரிவித்த கொளத்தூர் மணி ''எத்தனையோ அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ளபோது, ஏன் மனிதக் கழிவுகளை வைத்து மரபணு சோதனை நடத்த முடியாது'' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ''போதைப்பொருட்களே சட்டம் ஒழுங்கு பிரச்னைக்குக் காரணம்'' - பாமக தலைவர் அன்புமணி!