VIDEO: பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்; கண்காணிக்க தயாராகும் ஆய்வகம் - கொடைக்கானல்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், பூமிக்கு மிக அருகில், C2022 E3 ZTF என்ற வால் நட்சத்திரம், பயணித்து கடக்க உள்ளதாக, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் தகவல் கொடுத்துள்ளது. இன்று அதிகாலை 3 மணி முதல், கணினியின் மூலம் இயங்கக்கூடிய உயர் தொழில்நுட்ப தொலை நோக்கி உதவியுடனும், நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய இரும்பு தொலை நோக்கிகள் உதவியுடனும் அதன் நகர்வை, கண்காணிக்கத் துவங்கியுள்ளதாக தலைமை விஞ்ஞானி எபினேசர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று முதல் தெரியத்துவங்கும் வால் நட்சத்திரம், பிப்ரவரி ஒன்றாம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் என்றும், அதனை பற்றி, விவரங்களை, தெரிந்துகொள்ள விரும்பும் வான் இயற்பியலில் ஆர்வமுள்ளவர்கள், கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்திற்கு, நேரில் வந்து தெரிந்தும், வால் நட்சத்திரத்தை கண்டும் ரசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.