Chandrayaan-3: செப்டம்பரில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும்... இஸ்ரோ துணை இயக்குநர் தகவல்!
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் அதிக தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், விளையாட்டில் தேசிய அளவில் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் 1.05 கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப்பாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இஸ்ரோவின் துணை இயக்குநர் S.V சர்மா பங்கேற்றிருந்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சந்திரயான் - 3, திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீங்கள் அறிவிப்பை பார்த்திருப்பீர்கள். அதற்காக ஒரு துறையே தீவிரமாக இயங்கி வருகிறது. மேலும் வருகிற செப்டம்பர் மாதம் சந்திரயான் - 3 விண்ணில் ஏவப்பட வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் உள்ளனர். அதற்காக தேதி குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இதுவரை 117 செயற்கைக்கோள் இந்தியாவிலேயே தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதிக எடை கொண்டதை தவிர்த்து, மற்ற எல்லா செயற்கைக்கோளுமே ஸ்ரீஹரிகோட்டாவில் தான் ஏவப்படும். இதுவரை நமக்குத் தேவையான செயற்கைக்கோளை மட்டுமே தயாரித்து அனுப்பியுள்ளோம். மேலும் இதுவரை அனுப்பியதில் 390-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் வேற நாட்டு உடையது.
அதேபோல மனிதனை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தையும் இஸ்ரோ முழுவீச்சில் செய்து வருகிறது. ஆளில்லாத பயணங்களை வெற்றிகரமாக செய்தபின், மனிதனை விண்ணிற்கு அனுப்புகிற திட்டம் செயல்படுத்தப்படும்” என இஸ்ரோவின் துணை இயக்குநர் S.V. சர்மா தெரிவித்தார்.