ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை - தர்மபுரி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
காவிரி நீர் பிடிப்புப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து தற்போது விநாடிக்கு 24ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து 21ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடையால் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST