BJP vs DMK: திமுகவினரை விமர்சித்து பாஜவினர் பிளக்ஸ்... மர்ம நபர்கள் கிழித்ததால் பழனியில் பரபரப்பு! - என் மண் என் மக்கள்
🎬 Watch Now: Feature Video
Published : Sep 15, 2023, 2:16 PM IST
திண்டுக்கல்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, "என் மண் என் மக்கள்" என்ற யாத்திரையை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறார். பயணத்தின் ஒரு பகுதியாக அவர் பழனிக்கு வருகை தர உள்ளார். இதனையொட்டி பழனி பகுதியில் பாஜகவினர் சார்பில் பழனி பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று (செப். 14) இரவு பேருந்து நிலைய வேல் ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த பாஜக பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இந்த பேனரில் 'D-DENGU, M-MALERIA, K-KOSU DMK ஒழிப்போம்' என்று திமுவினரை விமர்சனம் செய்து வைக்கபட்ட பேனர் அடையாளம் தெரியாத நபர்களால் கிழிக்கபட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில், பாஜகவினர் பேருந்து நிலைய பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து பேனரை கிழித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி முருகேசன், தாசில்தார் பழனிச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் பழனியில் தமிழக ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவித்து திமுக சாா்பில், வைக்கப்பட்டிருந்த பேனர் பாஜகவினரால் கிழிக்கப்பட்டதாக திமுகவினர் புகார் அளித்த சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று பாஜக பேனர் கிழிக்கப்பட்டது திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.