ETV Bharat / technology

20 நிமிட சார்ஜில் 500 கி.மீ.. தானாக பார்க்கிங்.. வெள்ளத்தால் பாதிக்காது.. மகேந்திராவின் பிரமிப்பூட்டும் இரு கார்கள்..! - MAHINDRA NEW ELECTRIC CARS

மகேந்திரா நிறுவனத்தின் மின்சாரக் கார்களான XEV 9e மற்றும் BE 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. அந்த கார்களின் சிறப்பம்சங்கள் பிரமிப்பூட்டுகின்றன.

சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்
சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 6:29 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட, மகேந்திரா நிறுவனத்தின் மின்சாரக் கார்களான XEV 9e மற்றும் BE 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

முழு அளவில் சார்ஜ் செய்யப்பட்டால் 500 கி.மீ தூரம் செல்லும் வகையிலான இந்த இரண்டு வகை மின்சார கார்களும் தானியங்கி முறையில் ஓட்டுநர் இல்லாமலேயே பார்க்கிங் செய்து கொள்வது உள்ளிட்ட நவீன வசதிகளை முதலமைச்சர் நேரில் பார்த்தறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேந்திர நிறுவனத்தின் மகேந்திரா கார் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் வேலுசாமி, '' நாளை முதல் இந்த இரண்டு மின்சார கார்களின் சோதனை ஓட்டம் தொடங்கும். ஏற்கனவே இந்த கார்களை அறிமுகம் செய்து விட்டோம். இன்று முதல்வர் இவற்றை பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டதால் இங்கு எடுத்து வரப்பட்டன. இரண்டு கார்களுமே முழுவதும் மின்சார கார்களாக உள்ளன.

சிறப்பம்சம்:

கார்களின் பேட்டரி 20 நிமிடத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். முழு அளவில் சார்ஜ் ஆனவுடன் 500 கி.மீ தூரம் வரை செல்லும். குறைத்த நேரத்தில் சார்ஜ் ஆவது, அதிக தூரம் செல்வது இரண்டும்தான் இந்த கார்களின் சிறப்பம்சம்.

தானாக பார்க்கிங் ஆகும்:

இந்த கார்களில் Virtual auto park எனும் வசதி உள்ளது. காரை விட்டு இறங்கி வெளியில் சென்று VAP மோடை அழுத்தினால் கார் தானியங்கி முறையில் முன்னோக்கி, பின்னோக்கி நகர்ந்து அதுவே பார்க்கிங் ஆகி கொள்ளும். ஒருவேளை பார்க்கிங் ஆவதை தடுக்கும் வகையில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் அது குறித்து சத்தம் எழுப்பி எச்சரிக்கை செய்துவிடும்.

இந்த கார்களில் 12 சென்சார்கள், 6 கேமராக்கள், 5 ரேடார்கள் உள்ளன. வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநரின் கருவிழியை கவனிக்கும் வகையில் கேமராக்கள் உள்ளன. ஓட்டுநர் நேராக சாலையை பார்க்காமல் வேறு எங்கும் பார்த்தால், எச்சரிக்கை செய்வதுடன் ஸ்டியரிங் தானாகவே அசைந்தும், திரும்பியும் சரியான பாதையில் கார் செல்வதை உறுதி செய்யும்.

இதையும் படிங்க: 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு....கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

5 ஸ்டார் ரேட்டிங்

இரண்டு கார்களுமே 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளன. Navigation முறையில் எந்த சாலையில் செல்ல வேண்டுமோ அந்த சாலைக்கு arrow காண்பிக்கும் வகையில் அமைத்துள்ளோம். போக்குவரத்து நெரிசலில் 30..20..50 என speed limit ஐ அதுவே பரிந்துரைக்கும். காருக்குள் 3 திரைகள், 16 ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விலையில் உள்ள ஆடி, பென்ஸ் கார்களில் கூட இந்தளவு ஆடியோ சிஸ்டம் கிடையாது. பாடல் இசைக்கு ஏற்றவாறு உள்ளே உள்ள விளக்குகள் மின்னி நடனம் ஆடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கார்களை Pack 3 கார்களாக சந்தையில் அறிமுகப்படுத்துகிறோம்.

மாடு நின்றால் கார் நின்று விடும்:

அதன்டி, XEV 9e கார்கள் 39.5 லட்சமும் , BE 6 கார்கள் 26.9 லட்சமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கார்கள் நெடுஞ்சாலையில் போகும்போது ஒரு Laneல் இருந்து மறு lane க்கு மாற indicator போட்டாலே போதும், அந்த Lane ல் வேறு வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்து தானாகவே கார்கள் அடுத்த lane க்கு சென்றுவிடும். சாலையின் குறுக்கே மாடு நின்றால் அதை கண்டறிந்து தானாகவே கார் நின்று விடும்.

வெள்ளத்தால் பாதிக்காது:

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஓட்டுநர் உள்ளே அமர்ந்திருப்பது அவசியம். ஆனாலும், ஓட்டுநர் விருப்பப்பட்டால் கார் தானாகவே சாலைகளுக்கு ஏற்ப வளைந்து செல்லும் வகையில் Mode- ஐ மாற்றிக் கொள்ள முடியும். வெள்ள நீரால் இந்த வகை கார்கள் பாதிக்கப்படாது. பேட்டரி டெஸ்ட் செய்தபோது 48 மணி நேரம் தண்ணீருக்குள்ளேயே இந்த கார்களின் பேட்டரிகள் வைக்கப்பட்டு இருந்தன. 12 மீ உயரத்தில் இருந்து கீழே போட்டாலும் பேட்டரி உடையாது.

எப்படி சார்ஜ் செய்வது?

வீடுகளில் Ac power charge முறையில் 2 காரினையும் சார்ஜ் செய்ய முடியும். நெடுஞ்சாலைகளிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முழு அளவில் சார்ஜ் செய்தால் நகரங்களுக்குள் 400 கி.மீ தூரமும், நெடுஞ்சாலைகளில் 500 கி.மீ தூரமும் இந்த கார்கள் பயணிக்கும்'' என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.