ETV Bharat / state

6 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்...! என்ன காரணம்? - NO PONGAL VILLAGE

தமிழ்நாட்டில் உள்ள ஓர் கிராமத்தில் கடந்த ஆறு தலைமுறையாக பொங்கலை கொண்டாடாமல் இருந்து வருகின்றனர்.

கேளையாப்பிள்ளையூர் கிராமத்தினர்
கேளையாப்பிள்ளையூர் கிராமத்தினர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 7:22 PM IST

Updated : Jan 14, 2025, 9:55 AM IST

தென்காசி: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் எந்த பண்டிகையை எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னணியில் ஒரு பாரம்பரியம் இருக்கும். அந்த வகையில், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிவது, மனிதன் உயிர் வாழ்வதற்கு மட்டுமல்லாமல் செடி, கொடி, மரம் போன்ற அனைத்து உயிர்களுக்கும் வாழ்வை கொடுக்கும் கதிரவனுக்கு நன்றி செலுத்துவது, மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மண் பானைகளில் வீடுகளில் பொங்கல் வைப்பது, பெண்களின் கலைநயத்தை உணர்த்தும் வகையில் முற்றங்களில் கோலம் வரைவது, ஆண்களின் வீரத்தை பறைசாற்ற வீர விளையாட்டு போட்டி நடத்துவது என பல்வேறு பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள் பொங்கல் பண்டிகையில் அடங்கியிருக்கிறது.

அதிசய கிராமம்

இப்படி பொங்கல் பண்டிகை என்றாலே அன்றைய தினம் காலை மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு பனை ஓலைகளில் தீ மூட்டி, மண் பானைகளில் அழகிய கலைநயத்தோடு பொங்கல் வைத்து கதிரவனை வழிபடுவார்கள். எனவே, பொங்கல் என்றாலே அன்றைய தினம் பொங்கல் பானையில் பொங்கல் வைப்பது தான் விசேஷம். ஆனால், கடந்த ஆறு தலைமுறையாக பொங்கல் வைக்காமல் பொங்கல் பண்டிகையை கொண்டாடாத அதிசய கிராமம் ஒன்று தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே கேளையாப்பிள்ளையூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த மக்கள் முன்னோரு நாளில் பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் வைத்ததாகவும், அப்போது பொங்கல் பானையில் நுரை பொங்கி வராமல் முன் கூட்டியே உலை கொதித்ததாகவும் கூறப்படுகிறது. பொங்கல் பானையில் முதலில் நுரைத் தள்ளி பொங்கினால் தான் அந்த பொங்கலை போல் மக்களின் வாழ்க்கையும் இன்பத்தில் பொங்கி செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால், பொங்கல் பானை பொங்காமல் உலை கொதித்ததால், அதை அபசகுணமாகவும், தெய்வ குத்தமாகவும் கருதி அன்று முதல் தங்கள் ஊரில் பொங்கல் கொண்டாட கூடாது என கேளையாப்பிள்ளையூர் கிராமத்து மக்கள் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், இங்குள்ள உச்சினிமாகாளி அம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். திருவிழா நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைக்காமல் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்ததன் காரணமாக தான் இது போன்ற அபச குணம் ஏற்பட்டதாகவும் இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர்.

எந்த கொண்டாட்டமும் இல்லை

பல் துலக்குவதில் இருந்து படுத்து உறங்குவது வரை அனைத்தும் இயந்திரமயமான இந்த டிஜிட்டல் காலத்திலும், தங்கள் முன்னோர்கள் சொன்ன வாக்கை காப்பாற்றுகின்றனர். தற்போது வரை இக்கிராம மக்கள் பொங்கலை கொண்டாடுவதில்லை. பொங்கல் அன்று தங்கள் வீடுகளின் முன்பு யாரும் இங்கு பொங்கல் பானை வைத்து வழிபடுவதில்லை.. நாடே பொங்கல் கொண்டாட்டத்தில் திகைத்து இருந்தாலும் கூட, இக்கிராம மக்கள் மட்டும் பொங்கல் அன்று எந்த ஒரு ஆரவாரமும், கொண்டாட்டமும், உற்சாகமும் இல்லாமல் அமைதியாக இருக்கின்றனர். அன்றைய தினம் வீடுகளின் முன்பு கரும்புகளால் அலங்கரிப்பது, பொங்கலுக்கே உரித்தான விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் இருப்பது என எந்த ஒரு கொண்டாட்டத்திலும் ஈடுபடுவது இல்லையாம்.

கோயிலில் மட்டும் தான் பொங்கல்

இது குறித்து கேளையாப்பிள்ளையூரை சேர்ந்த முருகேசன் நம்மிடம் கூறும் போது, '' ஆறு தலை முறைகளாக நாங்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டில் பொங்கல் வைத்த போது பானை பொங்குவதற்கு முன்பே உலை கொதித்துள்ளது. இது அபச குணம். தை மாதம் கோயில் திருவிழா வரும். அந்த கோயில் திருவிழாவில் பொங்கல் விடுவதற்கு முன்பு வீடுகளில் பொங்கல் விட்டதால் தான் பானை கொதித்துள்ளது. அதனால் பொங்கல் விடக்கூடாது என முன்னோர்கள் முடிவெடுத்து விட்டார்கள். கோயிலில் மட்டும் தான் பொங்கல் விடுவோம். அதை தெய்வக் குற்றமாகவும் எங்கள் முன்னோர்கள் கருதினார்கள். பொங்கல் அன்று நாங்கள் எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபட மாட்டோம். எனக்கு 74 வயது ஆகிறது. இதுவரை நான் பொங்கல் கொண்டாடியது இல்லை'' என்றார்.

இது குறித்து வேலுச்சாமி கூறும்போது, '' இதுவரை நாங்கள் பொங்கல் வைத்ததில்லை.. நாங்கள் வீட்டிற்குள் வைத்து மட்டும் கடவுளை வணங்குவோம். எனக்கு விவரம் தெரிந்தவரை பொங்கல் கொண்டாடியது இல்லை. நான் திருமணமான முதல் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. இப்போதுள்ள இளைஞர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால், நாங்கள் அவர்களிடம் எடுத்துக் கூறுவோம். அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்'' என்றார்.

தல பொங்கல் கூட கொண்டாடியதில்லை

இது குறித்து பொன்னுத்துரை கூறும் போது, '' கோயில் திருவிழாவில் மட்டுமே பொங்கல் விடுவோம்.. புதிதாக திருமணமான பெண்கள் பொங்கல் விடுவதற்கு ஆசைப்பட்டாலும் கூட எங்கள் ஊரில் உள்ள பெரியவர்கள் அவர்களிடம் நடந்ததை எடுத்து கூறுவார்கள். எனக்கு திருமணம் ஆகி 26 ஆண்டுகள் ஆகிறது. நான் தல பொங்கல் கூட கொண்டாடியதில்லை. எங்கள் முன்னோர்கள் எங்களிடம் கூறியதை நாங்கள் எங்கள் குழந்தைகளிடம் கூறி வருகிறோம்'' என்றார்.

இது குறித்து சங்கீதா என்ற பெண் நம்மிடம் கூறும் போது தமிழ்நாட்டின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா இனிவரும் காலங்களில் கொண்டாட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. கொஞ்சம் மாத்தி யோசிக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும்; ஆனால் மூடநம்பிக்கை இருக்கக்கூடாது. பொங்கல் பண்டிகை என்றாலே வீட்டின் முன்பு பொங்கல் பானை வைத்து கரும்பு வைத்து கொண்டாடுவது தான் நல்ல விஷயம். நமது குழந்தைகளுக்கும் சந்தோசம் ஏற்படும். ஆனால், எல்லோரும் அதை தவிர்க்கிறார்கள். வீட்டுக்குள் கேஸ் அடுப்பில் வைத்து பொங்கல் வைப்பதை விட வெளியில் வைத்து பனை ஓலையில் பொங்கல் வைப்பது நன்றாக இருக்கும். இனி குழந்தைகளின் வாழ்க்கையை தான் நாம் பார்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சம் மாறிவரும் என நம்புகிறேன்'' என்றார்.

ஆண்கள் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்ததால் தங்கள் முன்னோர்களின் ஐதீகத்தை கடைபிடித்தாலும் கூட, பிற ஊர்களில் இருந்து திருமணம் ஆகி வந்த பெண்கள் நமது பாரம்பரிய திருவிழாவான பொங்கலை கொண்டாட வேண்டும் என பெரிதும் விரும்புவதை உணர முடிந்தது.

Last Updated : Jan 14, 2025, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.