இந்து சமய அறநிலையத்துறையில் தணிக்கை பிரிவு பணியிடங்களை ஏற்படுத்த தீர்மானம்!
🎬 Watch Now: Feature Video
Published : Oct 29, 2023, 9:04 AM IST
திண்டுக்கல்: பழனியில் இந்து சமய அறநிலையத்துறை நிறுவனங்களின் தணிக்கைக் துறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பிராபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 300க்கும் மேற்பட்ட தணிக்கைத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 17 இணை ஆணையர் அலுவலகங்கள், 10 உதவி ஆணையர் அலுவலகங்கள், 120 ஆய்வாளர் அலுவலகங்களும் உள்ள நிலையில், அதற்கு நிகரான தணிக்கை பிரிவு பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். அறநிலையத் துறையில் தணிக்கைத் துறைக்கு புதிய அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
இந்த துறையில் நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. எனவே 19 மண்டல தணிக்கை அலுவலகங்களில் 4 அதிகாரிகள் மட்டுமே தற்போது பணிபுரிவதாகவும், உதவி தணிக்கை அலுவலர் மற்றும் தணிக்கை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களின் பட்டியலை தயார் செய்து, பதவி உயர்வு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.