மைதானத்திற்குள் புகுந்த காட்டு யானை..மாணவர்களை விரட்டிச் சென்றதால் பரபரப்பு! - NILGIRIS
🎬 Watch Now: Feature Video
Published : Nov 20, 2024, 8:21 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதிகள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் சமீப காலமாக வனவிலங்குகள், குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.
இந்தநிலையில் கூடலூர் அரசு நலக்கோட்டை அரசு பள்ளி மைதானத்தில், நேற்று மாலை நேரம் பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது, திடீரென வனப்பகுதியில் இருந்து அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை பள்ளி மைதானத்தில் நுழைந்தது.இதனைக் கண்டதும் அங்கு விளையாடிக் கொண்டு இருந்த பள்ளி மாணவர்கள் செய்வதறியாது நாலாபுறமும் ஓடினார்.
பின்னர் சிறிது நேரம் மைதானத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானை, தானாகவே அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். உணவு, மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்து விடுகின்றன இதனால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றன. எனவே வனத்துறையினர் காட்டுயானை நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.