மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு! - ARIYUR CHESS TOURNAMENT
🎬 Watch Now: Feature Video


Published : Nov 18, 2024, 10:04 AM IST
வேலூர்: அரியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நேற்று (நவ.17) நடைபெற்றது. இப்போட்டியை நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி துவங்கி வைத்தார். இதில், நாராயணி பள்ளி இயக்குநர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், இப்போட்டியில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டு விளையாடியுள்ளனர். இதனையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றுகளை நாராயணி பள்ளி நிர்வாக அதிகாரி ஆதிகேசவன் மற்றும் பள்ளி முதல்வர் லஷ்மி ஆகியோர் வழங்கினர்.
அதன்படி, பொதுப்பிரிவில் சண்முகம், 16 வயதிற்குப்பட்டோருக்கான பிரிவில் ஸ்பிரிங்க் டேஸ் பள்ளி மாணவி இந்துலேகா, 13 வயது பிரிவில் லஷ்மி கார்டன் பள்ளி மாணவர் சாய் ஹரி, 11 வயது பிரிவில் நாராயணி இ-டெக் பள்ளி மாணவர் பிரஷாந், 9 வயது பிரிவில் பி.எம்.டி ஜெயின் பள்ளி மாணவர் மௌலீஸ்வர் முதலிடம் வென்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றனர்.