உலக பாரம்பரிய வாரம்; தஞ்சையில் கோலாகல கொண்டாட்டம்!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் : உலக பாரம்பரிய வாரம் ஆண்டுதோறும் நவ 19 முதல் 25 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில், தஞ்சாவூரில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலிருந்து அரண்மனை வரை பாரம்பரிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை உதவி ஆட்சியர் உத்கர்ஷ் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் நையாண்டி மேளம், மயிலாட்டம், காளையாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், கல்லூரி மாணவர்கள் 'பாரம்பரியம் நமது பெருமை', 'தலைமுறைகள் செழிக்க நம் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருப்போம்' உள்ளிட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர். இப்பேரணியில் கல்லூரி மாணவர்கள், சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி இந்நிகழ்ச்சியினைக் கண்டு ரசித்தனர்.