மரபுகளை மீறிய உயர் நீதிமன்ற நீதிபதி: தலைமைச் செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்து வாழ்த்து! - iraianbu
🎬 Watch Now: Feature Video
சென்னை உயர் நீதிமன்ற மரபுகளை உடைத்தெறிந்து தலைமைச் செயலாளர் இறையன்புவை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு காலம் பணியில் இருந்த இறையன்பு, நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மரபுகளை உடைத்து, தலைமைச் செயலாளர் இறையன்புவை அவரது அறையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்து செயல்பட்டவர் தலைமைச் செயலாளர் இறையன்பு என தெரிவித்தார். அதற்கு ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து செயல்படுவேன் என தலைமைச் செயலாளர் இறையன்பு நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஓய்வு பெறும் தலைமைச் செயலாளரை உயர் நீதிமன்ற நீதிபதி மரபையும் மீறி மதிப்புணர்வுடன் சந்தித்தது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். வழக்கமாக உயர் நீதிமன்ற நீதிபதியை தலைமைச் செயலாளர் சென்று சந்திப்பதுதான் மரபு. மாறாக, நீதிபதியே தலைமைச் செயலாளரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.