குழந்தைகள் - பெரியவர்களுக்கு இலவச துணி வழங்கிய தன் ஆர்வலர்கள்: மகிழ்ச்சியில் மூழ்கிய கிராமம்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் ஏழை எளிய குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிகள் செய்வதற்கு தன் ஆர்வலர்கள் பல நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் ஹெல்பிங் ஹார்ட் என்ற அமைப்பை தொடங்கி, ஆதரவற்ற மற்றும் முதியவர்கள் குழந்தைகளைப் பாதுகாத்து வருகிறார்.
அப்பார்ட்மென்ட் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்திய துணிகளைப் பெற்று பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர், அர்த்தநாரி பாளையம், கரியா செட்டிபாளையம், ஜல்லிப்பட்டி ஊராட்சி மஞ்சுநாயக்கனூர் சமுதாயக்கூடத்தில் குழந்தைகளுக்கான பனியன் மற்றும் கவுன், சட்டை, சுடிதார் என வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இரண்டு துணிகள் விதம் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் இது போன்ற கிராமப்பகுதியில் கொடுத்து வரும் தன்னார்வ அமைப்புக்கு, பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் மிகவும் நன்றி தெரிவித்தனர். இவர்களைப் போன்று மற்ற தன்னார்வ அமைப்புகளும் ஏழை எளிய மக்களுக்கு கல்வி கற்கவும், மேல் படிப்புக்கு முடியாமல் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கினால் ஏழை எளிய மக்கள் படித்து நல்ல வேலைக்குச் செல்ல ஏதுவாக இருக்கும் என இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் இது போன்ற மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க முயற்சிப்பதாக இந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.