பள்ளிவாசலுக்குள் புகுந்து நோன்பு கஞ்சியை ருசி பார்த்த யானைகள்! - niligiri district news
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: நீலகிரி மாவட்டம் பர்லியார் பள்ளிவாசலுக்குள் இரவு புகுந்த யானைகள் கூட்டம் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பாெருட்களை சூறையாடிதுடன் அங்கிருந்த சுவற்றினையும் முட்டி உடைக்க முயற்சி செய்தது. மேலும் இச்சம்பவம் இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஒரு மாதகாலமாக போக்கு காட்டி வந்த காட்டு யானைகளை வனத்துறையினர் மேட்டுப்பாளையம் அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்ப முயற்சித்தனர். இந்நிலையில் நேற்று இரவு பர்லியார் வழியாக கல்லாரை நோக்கிச் சென்ற காட்டு யானைகள் திடீரென பர்லியார் பகுதியில் இருந்த பள்ளி வாசலுக்குள் நுழைந்து. அங்கிருந்த நோன்பு கஞ்சியை ருசி பார்த்தன.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பாெருட்களை சூறையாடிதுடன் அங்கிருந்த சுவற்றினையும் முட்டி மோதி உடைக்க முயற்சி செய்தது. இது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நேரம் இதேப் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டுயானைகள் பின்னர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.
நீலகிரி மாவட்டம் பர்லியார் பள்ளிவாசலுக்குள் இரவு புகுந்த யானைகள் கூட்டம் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பாெருட்களை சூறையாடிதுடன் அங்கிருந்த சுவற்றினையும் முட்டி உடைக்க முயற்சி செய்தது.இது இப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.