பருவமழையால் பேரிழப்பு! வேர்க்கடலை அறுவடையில் போதிய மகசூல் இல்லை என விவசாயிகள் வேதனை!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாரப்பட்டி, மேக்களூர், வேடந்தவாடி, சோமாசிபாடி, கழிக்குளம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் மானாவரியாக வேர்க்கடலையை அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். மேலும், பயிரிட்ட வேர்க்கடலை முளைத்து அறுவடைக்கு தயாராகி விட்டன.
இந்நிலையில் தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் தொடர் மழை காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகசூல் குறைந்து உள்ளதாக விவசாயிகள் தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது பருவம் தவறி தொடர்ந்து மழை பெய்து வருவதால் செடிகள் வளர்ந்து இரண்டு, மூன்று வேர்க்கடலை மட்டுமே இருப்பதாகவும் இதனால் கடந்த ஆண்டை விட மகசூல் குறைந்து உள்ளதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், பயிரிடுவதற்கு செலவான தொகை கூட கிடைக்க வாய்ப்பில்லை எனவும், பருவ மழையின் காரணமாக தங்கள் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதாகவும், தங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு தொகை வழங்கி விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.