ராணிப்பேட்டை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில், காயங்களின்றி நடிகர் யோகி பாபு உயிர் தப்பியுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்த தகவல் தவறானது என நடிகர் யோகி பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிகாலை 3 மணியளவில் பெங்களூரு நோக்கி நடிகர் யோகி பாபு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கார் வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஈச்சர் லாரி மீது மோதியுள்ளது. அப்போது, அந்த வெள்ளை நிறக் கார் விபத்துள்ளகுள்ளானது.
ஆனால், "இந்த விபத்தில் சிக்கிய நடிகர் யோகிபாபு அதிர்ஷ்டவசமாக எந்த காயங்களும் ஏற்படாமல் உயிர் தப்பியுள்ளார். பின், வேறு கார் வரவழைக்கப்பட்டு நடிகர் யோகி பாபு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், சுமார் அரைமணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது" எனத் தகவல் வெளியான நிலையில், இது தவறான தகவல் என யோக பாபு விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: ”கரெக்ட்டா சம்பளம் வந்தது, அதைவிட அதிகமாக மரியாதை”... ’அமரன்’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு!
இதுகுறித்து அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணிக்கவில்லை. ஆனால், நானும், என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு, என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
Im fine all. This is false news pic.twitter.com/EwO3MB3T2Q
— Yogi Babu (@iYogiBabu) February 16, 2025
இந்த விஷயம் அறிந்து என் நண்பர்கள், திரை பிரமுகர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இந்த சமயத்தில் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.