Video: கிறிஸ்துமஸை முன்னிட்டு ஆடு விற்பனை படுஜோர் - கோடிகளில் விற்பனை - Goat sale ahead of Christmas in punjaipuliyampatti
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த புன்செய்புளியம்பட்டியில் நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் 600-க்கும் மேற்பட்ட வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெள்ளாடுகள் வாங்க வியாபாரிகளிடையே போட்டி நிலவியது. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று ரூ.7,250 வரையும், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் ரூ.6,000 வரையும் விற்பனையானது. மேலும் 950-க்கும் மேற்பட்ட மாடுகள், எருமைகள், கன்றுகள் மொத்தம் ரூ.1.50 கோடிக்கு விற்பனையாது. மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளின் தீவனம் எளிதாக கிடைப்பதால் கறவை மாடுகள், கன்றுகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST