Kerala Flood: சபரிமலையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்! திரிவேணி பாலத்தை ஒட்டி செல்லும் வெள்ளநீர்! - சபரிமலையில் வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
கேரளா: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சபரிமலை அருகில் உள்ள பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அப்பகுதியில் உள்ள 2 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறிய நீர், பம்பை ஆற்றில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கொச்சுபம்பா மற்றும் காக்கி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்ததை அடுத்து அணைகளின் ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவதற்காக பக்தர்கள் ஆற்றைக் கடந்து செல்லும் திரிவேணி ஆற்றில் இடம் பெற்றுள்ள திரிவேணி பாலத்தை வெள்ளநீர் தொட்டுச் செல்கிறது.
தற்போது கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் அப்பாலத்தின் வழியே செல்வதில்லை. இந்த நிலையில் பம்பை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதற்கு முன்பாக சீரமைப்பு பணிகள் அனைத்தும் நடைபெறும் என்று பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.