அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து! - chennai
🎬 Watch Now: Feature Video
சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் அருகே தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அங்கு உள்ள குப்பைகள் சேமிக்கும் இடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.மளமளவென பரவிய தீ அப்பகுதி முழுவதும் பரவியது. மேலும் அங்கு அருகில் இருந்த இரும்பு தாதுக்களை உருக்குவதற்காக பயன்படும் ராட்சத கேஸ் சிலிண்டரிலும் அந்த தீ பரவியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் ஜெ.ஜெ நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்விடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சென்ற 20-க்கும் மேற்பட வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தினால் அம்பத்தூர், கொரட்டூர், பாடி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. கரும்புகையால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர். இதனிடையே இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செயுது விசாரணை நடத்தி வருகின்றனர்.