திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திர விழா - திருவள்ளூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான வடாரண்யேஸ்வரர் கோயில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கம். அந்த வகையில் பங்குனி உத்திர விழா இன்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து, 10 நாட்கள் காலை, இரவு உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவின், 7ஆம் நாளான ஏப்.1ஆம் தேதி கமலத்தேர் விழா நடைப்பெற உள்ளது. இதையடுத்து, ஏப். 6ஆம் தேதி இரவு, 10:00 மணிக்கு காரைக்கால் அம்மையார் ஊஞ்சலும், 7ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு காரைக்கால் அம்மையார் திருவீதியுலாவும் நடைப்பெறும்.
அதன் பின் அன்றிரவு காரைக்கால் அம்மையார் ஐக்கிய காட்சி நடைப்பெறும். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து செல்வர் என்பதால் திருத்தணி கோயில் அதிகாரிகள் விழாவிற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர். கரோனா தொற்றுக்கு பின் மூன்றாண்டுகள் கழித்து பங்குனி உத்திர விழா நடைப்பெறுவதால் உள்ளூர் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்