திருப்பத்தூர் அருகே பெரிய மூக்கனூர் கிராமத்தில் களைகட்டிய 'எருதுவிடும் விழா' - நாட்றம்பள்ளி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 25, 2023, 10:27 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பெரிய மூக்கனூர் கிராமத்தில் 52ஆம் ஆண்டு 'எருதுவிடும் திருவிழா' இன்று (ஜன.25) நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் தலைமையில் இந்த போட்டியில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் உரிய பாதுகாப்பு வசதியுடன், இந்த எருது விடும் திருவிழாவில் பங்கேற்றன. 

இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்த நிலையில், 2500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த எருது விடும் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் போலீசார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.