யானைகள் ஜாக்கிரதை - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை - wild elephant crossing

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 27, 2022, 5:23 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலையானது யானைகள் இடம்பெயரும் வழித்தடமாக உள்ளது. தாளவாடி தலமலை வனசாலை இடையே பழங்குடியின கிராமங்கள் இருப்பதால் போதிய அரசு போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால் மக்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர். தற்போது தலமலைச் சாலையில் யானைகள் அடிக்கடி சாலையை கடப்பது அதிகரித்துள்ளது. யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பதோடு சாலையோரத்தில் முகாமிட்டு தீவனம் உட்கொள்கின்றன. சில தினங்களாக தாளவாடியில் இருந்து தலமலை வழியாக திம்பம் செல்லும் சாலையில் ராமரணை அருகே யானைகள் குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து செல்கின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறும் வனத்துறை எச்சரித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.