கோடை விழாவின் 2ம் நாள்..குடும்பத்துடன் குவிந்த சுற்றுலாப் பயணியர்..
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி நேற்று தமிழக அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு மற்றும் காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து பூங்காவில் அலங்கரிக்கப்பட்ட மலர் உருவங்கள் மற்றும் பூக்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மலர்களால் வடிவமைக்கப்பட்ட கரடி உருவம் மற்றும் ஒட்டகச்சிவிங்கி காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட காட்டெருமை, டோரா பொம்மை உருவங்களை கண்டு செல்பி எடுத்து செல்கின்றனர்.
மேலும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை நீடித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. கண்களைக் கவரும் வகையில் பூக்கள் பூத்துக் குலுங்கி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: கோடை விடுமுறை - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!