Video: கீழ்பவானி கால்வாய் உடைப்பு.. வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் விளை நிலங்கள்! - வானிலை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி பிரதான கால்வாயின் 59 -வது மைல் பகுதியில் நேற்று மாலை உடைப்பு ஏற்பட்டது. கால்வாயின் கீழ்பகுதியில் மழைநீர் வடிகால் போக்கியில் ஏற்பட்ட சிறு உடைப்பு படிப்படியாக பெரியதாகி கால்வாய் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 300க்கும் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, மஞ்சள் வாழை உள்ளிட்ட விளை நிலங்களை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன்படி இரண்டாம் நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்து வரும் நிலையில், பாதிப்பின் நிலைகளை டிரோன் மூலம் ஈடிவி பாரத் படம் பிடித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST