புத்தாண்டு 2024; திருத்தணி முருகன் கோயிலில் இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதி!
🎬 Watch Now: Feature Video
திருத்தணி: அறுபடை வீடுகளில் 5வது படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த திருக்கோயிலில் 2024ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில், படிக்கட்டுகளில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, குத்துவிளக்கு ஏற்றி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா அரோகரா" என்று விண்ணைப் பிளக்கும் அளவிற்கு கோஷங்கள் முழங்கியும், முருகப் பெருமானின் இன்னிசை பாடல்கள் பாடியும், மலைக்கோயில் படிக்கட்டுகளில் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு, டிச.31ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 1ஆம் தேதி வரை இரவு முழுவதும் தொடர் தரிசனம் செய்வதற்கு திருக்கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இரவு முழுவதும் திருக்கோயில் திறந்திருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.