ராகுல் காந்தி தகுதி நீக்கம் விவகாரம் - ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தடுக்க டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட ஒசூர் காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ரயில்வே தண்டவாளத்தில் காங்கிரஸ் கட்சியினர் தலை வைத்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்புத்தூரில் இருந்து மும்பை வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்த நிலையில் ஓசூர் அருகே உள்ள பெரிய நாகதோனை என்ற பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால்
ஓசூரை நோக்கி வந்த குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் மாரண்டஅள்ளி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது.
இதனிடைய ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்தும், படுத்தும், தலை வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
அதேபோல ஓசூர் ரயில்வே நிலையம் அருகே மற்றொரு இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 80 காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி தகுதி நீக்கம் விவகாரம் - ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி!