"பாஜகவை வீழ்த்த விரும்பினால் ஒன்றிணையுங்கள்" - சீதாராம் யெச்சூரி வேண்டுகோள்! - dmk
🎬 Watch Now: Feature Video
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீதாராம் யெச்சூரி, "விழுப்புரத்தில் நடைபெற உள்ள சிபிஎம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் வந்தேன். மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினேன். கர்நாடக தேர்தல் முடிவுகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசித்துள்ளோம்" எனக் கூறினார்.
பின்னர் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டம் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு பதிலளித்த சீதாராம் யெச்சூரி, "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்புக் கூட்டம் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது. அதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவை பாதுகாக்கவும், பாஜகவை வீழ்த்தவும் விருப்பமுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்" என சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாம்பலம் ரயில் நிலையம் - தி நகர் பேருந்து நிலையம்.. நிமிடங்களில் கடக்க ஆகாய நடைபாதை- முதலமைச்சர் துவக்கி வைத்தார்!