சேத்துப்பட்டு அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தவப்பயணம்! - நெடுங்குணம் மாதா மலை
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அன்னை ஆலயத்தில் நேற்று நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறையச் சிலுவையைச் சுமந்தபடி அழைத்துச் செல்வதையும், இயேசுவைக் காவலர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட சித்திரவதை செய்வதையும் தத்ரூபமாகச் சித்தரித்தபடி ஏராளமான கிறித்துவ பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவை ஏந்தி நெடுங்குணம் மாதா மலைக்கு தவப்பயணம் மேற்கொண்டனர்.
பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில் பக்தி மாலை பாடியபடி சேத்துப்பட்டு வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்குணம் மாதா மலைக்கு தவப்பயணம் மேற்கொண்டனர்.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில் 14 நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் பங்கு தந்தையர்கள் அருட் கன்னியர்கள் இளைஞர்கள் இளம் பெண்கள் அனைவரும் சிலுவையை சுமந்து சென்றனர்.
தொடர்ந்து நெடுங்குணம் மாதா மலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்நிலையில் சேத்துப்பட்டு லூர்து நகர், விமலா நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பங்குனி மாத பெளர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்!