தென்காசி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில்.. மீன்பிடிக்கும் சிறுவர்கள்! - flood relief
🎬 Watch Now: Feature Video
Published : Dec 20, 2023, 10:10 PM IST
தென்காசி: கடந்த மூன்று நாட்களாக தென்காசி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையினால் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக விவசாய நிலங்கள் பெரும் சேதத்தை சந்தித்தது. கனமழையின் காரணமாக தென்காசி முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத அளவிற்கு இருபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழைப்பொழிவு குறையத்தொடங்கிய நிலையில், நேற்று(டிச.19) முதல் தென்காசி மாவட்டத்தில் வெள்ளநீர் வடிய துவங்கியது. இதனையடுத்து தென்காசி மாவட்டம் அதன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழையினால், தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்கள் மற்றும் ஏரிகளும் தற்போது நிரம்பி காணப்படுகின்றன. தென்காசி மாவட்டம் வேலாயுதபுரம் கிராமத்தில் இடைவிடாது பெய்த கன மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
அதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் கடும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், சாலைகளில் தேங்கிய தண்ணீரில் குழந்தைகள் மீன் பிடித்தும், நீச்சல் அடித்தும் விளையாடி வருகின்றனர். குளத்தின் மறுகால் வழியாக வெளியேறும் தண்ணீரில் இளைஞர்கள் சிலர் மீன் பிடித்து வருகின்றனர். இது காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.