மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் புகுந்த சிறுத்தைகள் - சிசிடிவி வெளியீடு! - leopard videos
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: உதகையில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு மற்றும் தமிழ்நாடு விருந்தினர் மாளிகை ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இந்த இடத்தைச் சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் காட்டு மாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சியர் குடியிருப்பு நுழைவு வாயில் பகுதியில் சிறுத்தை உலாவியது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அதே பகுதியில் மீண்டும் இரண்டு சிறுத்தைகள் தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் இருந்து, ஆட்சியர் குடியிருப்பை ஒட்டி உள்ள நுழைவு வாயில் பகுதியில் உலாவியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ஆட்சியர் குடியிருப்பில் சிறுத்தைகள் உலாவும் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்றது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.