"காலையில் பேஸ்ட், மாலையில் டீத்தூள்" - தேவைப்பட்டதை நைசாக திருடிய இளைஞர்.. வைரலாகும் சிசிடிவி! - Super Market
🎬 Watch Now: Feature Video
Published : Oct 27, 2023, 10:03 PM IST
சென்னை: "காலையில் பேஸ்ட், மாலையில் டீத்தூள்" எனத் தேவைப்பட்டதை நைசாக திருடிச் செல்லும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில் பிரபல பல்பொருள் அங்காடி (Super Market) செயல்பட்டு வருகிறது.
இந்த கடைக்கு, தினந்தோறும் இளைஞர் ஒருவர் வந்து சென்றுள்ளார். சந்தேகப்படும்படியான அந்த நபர், கடையில் எந்த பொருளையும் வாங்காமல், நீண்ட நேரம் கடைக்குள் சுற்றித்திரிந்து விட்டு வெளியேறி விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கவனித்து வந்த கடை ஊழியர்கள், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அதில் மர்ம நபர் டூத் பேஸ்ட், டீத்தூள், சாக்லேட் போன்ற பொருட்களைத் திருடிச் செல்வது பதிவாகி இருந்துள்ளது. இந்த காட்சிகளை வைத்துக் கடை உரிமையாளர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொருள் வாங்குவது போல கடைக்குள் நுழைந்து, தேவைப்பட்டதை நைசாக திருடிச் செல்லும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.