Video: மதுபோதையில் மயங்கியவரிடம் ஆட்டைய போட்ட நபர்.. வைரலாகும் வீடியோ! - crime
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் ( 24). இவர் செங்கல்பட்டு நத்தம் பகுதியில் அறை எடுத்துத் தங்கி மகேந்திரா சிட்டி வளாகத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்கல் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்றிரவு நண்பனின் பிறந்தநாள் என்பதால் மதுவிருந்தில் கலந்து கொண்டு அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இவருக்கு போதை தலைக்கேறியுள்ளது. இதனால் சுயநினைவு இழந்து வீட்டுக்குச் செல்ல முடியாமல், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடை வாசலில் படுத்து மயங்கியுள்ளார்.
இந்நிலையில் சுய நினைவின்றி படுத்துக் கிடந்த செல்வகுமாரை நோட்டமிட்ட ஒரு நபர் உதவுவது போல வந்து அவரது கையில் இருந்த வாட்ச், பாக்கெட்டில் இருந்த செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்து பார்த்தனர்.
அதில், ஒரு நபர் போதையில் கிடந்த செல்வகுமாரை நோட்டமிட்டு, நிறுத்தி நிதானமாக அவரிடமிருந்து பொருட்களை உருவுவது தெரிந்தது. அந்த கில்லாடி கேடியை தற்போது செங்கல்பட்டு நகர போலீசார் தேடி வருகின்றனர்.