சென்னை: இந்த 2025ஆம் ஆண்டு முதல் பாதியில் பல சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை விட சிறிய படங்கள் அதிகம் வெளியாகிறது. அந்த வகையில் பெரிய நடிகர்களான ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோர் படங்கள் இந்த ஆண்டு வெளியாகிறது. ’விடாமுயற்சி’ பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் நிலையில், அடுத்ததாக சூர்யா நடித்துள்ள ’ரெட்ரோ’, தனுஷ் நடித்துள்ள ’இட்லி கடை’, கமல்ஹாசனின் ’தக் லைஃப்’, ரஜினிகாந்த் நடித்துள்ள ’கூலி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இதுமட்டுமின்றி பல சிறிய பட்ஜெட் படங்கள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வெளியாகிறது. தனுஷ் இயக்கத்தில் இளம் நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ள திரைப்படம் ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. ஏற்கனவே கோலிவிட்டில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படமும் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது.
இதனைத்தொடர்ந்து திகில் படங்களுக்கு பெயர் பெற்ற அறிவழகன் இயக்கத்தில் ’சப்தம்’ திரைப்படமும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிகிறது. மேலும் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ’பிசாசு 2’ பல நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிகிறது. அதேபோல் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள ’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படமும் மார்ச் மாதம் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: மீண்டும் காமெடியில் கலக்கிய சந்தானம்... வசூலை வாரிக் குவிக்கும் ’மதகஜராஜா’! - MADHA GAJA RAJA COLLECTIONS
இதனைத்தொடர்ந்து காமெடி டீசர் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மகாராஜா, லப்பர் பந்து போன்ற சிறிய பட்ஜேட் படங்களை ரசிகர்கள் விரும்பி பார்த்த நிலையில், இந்த ஆண்டும் பல சிறிய பட்ஜெட் படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வணிக ரீதியாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.